உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வடபழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு விநாயகர் களிமண் சிலை விநியோகம்

வடபழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு விநாயகர் களிமண் சிலை விநியோகம்

வடபழனி, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, வடபழனி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில், பக்தர்களுக்கு இலவசமாக களிமண் விநாயகர் சிலை வழங்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, வடபழனி முருகன் கோவிலில் நேற்று கணபதி ஹோமம், சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும், பக்தர்கள் 500 பேருக்கு, கொழுக்கட்டை பிரசாதமாக வழங்கப்பட்டது. அத்துடன், கோவில் நிர்வாகம் சார்பில், ஐந்தாவது ஆண்டாக களிமண் விநாயகர் சிலை இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. கோவிலை சுற்றியுள்ள பூக்கடை, மாலை கடை வியாபாரிகள், ஏழை மக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவருக்கும், கோவில் ஊழியர்கள் வாயிலாக களிமண் விநாயகர் சிலை இலவசமாக வழங்கப்பட்டது. களிமண் விநாயகருடன், வீட்டில் வைத்து எப்படி பூஜை செய்ய வேண்டும் என்ற விளக்க கையேடும் கொடுக்கப்பட்டது. மேலும், கோவிலுக்கு வந்த பக்தர்கள், 1,000 பேருக்கும், களிமண் விநாயகர் சிலை, எருக்கம் பூ மாலை மற்றும் அருகம்புல்லுடன் இலவசமாக வழங்கப் பட்டது. ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி