வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அந்த பகுதி வியாபாரிகளிடம் பணத்தை வசூல் செஞ்சு போட்டிருப்பாங்க
மேலும் செய்திகள்
வெள்ளாற்றில் மணல் திருட்டு அதிகரிப்பு
14-May-2025
மணலி:முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி, மணலியில், 1,000 பேருக்கு பிரியாணி வழங்கப்பட்டது.சென்னை வடகிழக்கு மாவட்டம், திருவொற்றியூர் மத்திய பகுதி தி.மு.க., மாணவர் அணி சார்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின், 102 வது பிறந்தநாளையொட்டி, நேற்று மதியம், 1,000 பேருக்கு பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.அதன்படி, மணலி மார்க்கெட் பகுதியில், 500 பேருக்கு பிரியாணி வழங்கும் நிகழ்ச்சியை, மாவட்ட செயலரும், மாதவரம் எம்.எல்.ஏ., வுமான சுதர்சனம், மணலி மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம், மாவட்ட மாணவர் அணி செயலர் செந்தில் உள்ளிட்டோர் வழங்கினர்.அதேபோல், மணலி பெரியார் தெருவில் நடந்த நிகழச்சியில், 500 பேருக்கு பிரியாணி வழங்கப்பட்டது. இதில், வட்ட செயலர்கள் முத்துசாமி, கணேசன், செல்வம், பகுதி மாணவர் அணி நிர்வாகி திருமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அந்த பகுதி வியாபாரிகளிடம் பணத்தை வசூல் செஞ்சு போட்டிருப்பாங்க
14-May-2025