உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அரசு பஸ் மோதி கோர விபத்து டாக்டர் பலி; 18 பேர் காயம்

அரசு பஸ் மோதி கோர விபத்து டாக்டர் பலி; 18 பேர் காயம்

செங்கல்பட்டு, செங்கல்பட்டில், அரசு பேருந்து மோதி மருத்துவர் பலியானார்; 18 பேர் காயமடைந்தனர். கல்பாக்கத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி, நேற்று காலை விழுப்புரம் போக்குவரத்து கழக அரசு பேருந்து வந்தது. செங்கல்பட்டு ராட்டினக்கிணறு ரயில்வே மேம்பாலம் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து அங்கு காத்திருந்த 18 பயணியர் மற்றும் சாலையைக் கடக்க காத்திருந்த இரு மருத்துவர்கள் மீது மோதியது. மேலும், செங்கல்பட்டிலிருந்து மதுராந்தகம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து மீதும் மோதியது. இதில், அஸ்தினாபுரம் பகுதியைச் சேர்ந்த மணிக்குமார், 46, என்ற குழந்தை கள் நல மருத்துவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனை யில் பணியாற்றி வந்தார். காய மடைந்த மற்றொரு மருத்துவர் பிரவீன்குமார் மற்றும் பயணியரை அங்கிருந்தோர் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மணிக்குமார் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை