உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / துரத்தி துரத்தி கடிக்கும் நாய்கள்: மாநகராட்சி அலட்சியம்

துரத்தி துரத்தி கடிக்கும் நாய்கள்: மாநகராட்சி அலட்சியம்

ஆவடி, ஆவடி மாநகராட்சியில், ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி, திருமுல்லைவாயில் நேதாஜி நகர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், 18,000த்திற்கும் மேற்பட்ட நாய்கள் உள்ளன.இதில், 6000த்திற்கும் மேற்பட்ட நாய்களுக்கு கருத்தடை மற்றும் 'ரேபிஸ்' தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக, ஆவடி மாநகராட்சியில் நாய்கள் பிடிக்கும் பணிகள் நடக்கவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கடந்த 15ம் தேதி பொங்கல் தினத்தன்று, ஆவடி அடுத்த சேக்காடு மேட்டு தெருவில், அப்பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்களை தெரு நாய் ஒன்று கடித்துள்ளது.இதேபோல், ஆவடி அடுத்த நெமிலிச்சேரியைச் சேர்ந்த 9 வயது சிறுமியை, நாய் ஒன்று துரத்திச் சென்று கடித்தது.அதை தடுக்க முயன்ற பெண் ஒருவரை, கன்னம் உட்பட பல்வேறு இடங்களில் கடித்துள்ளது.மேலும், நேற்று முன்தினம், ஆவடி அடுத்த மோரையைச் சேர்ந்த டெய்லர் ஒருவரை, தெருநாய் ஒன்று துரத்திச் சென்று கால்களில் கடித்துள்ளது.நாய்;ககடியால் பாதிக்கப்பட்டவர்கள், கடந்த நான்கு நாட்களாக, ஆவடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த வகையில், ஆவடி அரசு மருத்துவமனையில் கடந்த டிச., மாதம் முதல் இன்று வரை, 413 பேர் நாய்க்கடிக்கு சிகிச்சை பெற்றுள்ளனர்.இதுபோன்ற சம்பவங்கள் தொடரும் நிலையில், நாய்களால் ஏற்படும் தொல்லைகளை தடுக்கும் வகையில் தகுந்த நடவடிக்கை எடுக்க, அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், 'சேக்காடு குடியிருப்பு பகுதியில் நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என்றனர்.இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:கடந்தாண்டு ஜூலை மாதம், உரிமம் இல்லாமல் நாய்களுக்கு கருத்தடை செய்யக் கூடாது என, இந்திய விலங்குகள் நல வாரியம் உத்தரவிட்டுள்ளது.அந்த உரிமம் இல்லாததால், நாய்களை பிடிப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதற்கான உரிமம் பெற, ஆவடி மாநகராட்சி சார்பில் விண்ணப்பித்து உள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை