உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இது தெரியாம போச்சே!

இது தெரியாம போச்சே!

புத்தக காட்சியில், நுழைவுச் சீட்டு வழங்குதல், அரங்கு நுழைவு பரிசோதனை உள்ளிட்ட பணிகளில், 58 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் 36 பேர் அண்ணா பல்கலையில் முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், மீதமுள்ள 22 பேரும் முதுகலை மாணவர்கள்.ஒருங்கிணைப்பாளர் முனைவர் மனோகரன், 34, கூறியதாவது:கடந்த 12 ஆண்டுகளாக முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் தான், இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு விடுதியில் தங்கி, முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்ளும் இவர்கள், இங்கு கிடைக்கும் சம்பளத்தில், தங்கள் ஆய்விற்குத் தேவையான புத்தகங்களை வாங்க பயன்படுத்துகின்றனர்.தவிர, பல்லாயிரம் மக்களோடு பழகும் வாய்ப்பு, நிர்வாகம், மேலாண்மை, ஒருங்கிணைப்பு, சகிப்பு உள்ளிட்ட பண்புகளையும் உணர்ந்து புரிய, இந்த வேலைவாய்ப்பு அவர்களுக்கு பயன்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ