உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அபராதம் போடாதீங்க! போலீசிடம் கெஞ்சிய ஓட்டுநர்

அபராதம் போடாதீங்க! போலீசிடம் கெஞ்சிய ஓட்டுநர்

திருமங்கலம், மது போதையில் வாகனம் ஓட்டியதால், அபராதம் விதிக்க முயன்ற போலீசாரின் காலில் விழுந்து, ஆட்டோ ஓட்டுநர் கெஞ்சினார். திருமங்கலம், பார்க் சாலை சந்திப்பில், நேற்று முன்தினம் இரவு, சட்டம் - ஒழுங்கு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக ஆட்டோ ஓட்டிவந்த நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். பரிசோதனையில், ஆட்டோ ஓட்டுநர் மது அருந்தியிருந்தது உறுதியானது. அவருக்கு அபராதம் விதிக்க, போலீஸ் முயன்றனர். அப்போது, நுங்கியுடன் இருந்த ஆட்டோ ஓட்டுநர், சாலையில் அமர்ந்தபடி அழுது புலம்பினார். பின், தற்கொலை செய்து கொண்ட தன் மகளை நினைத்து மது குடித்தாக கூறி, போலீசாரின் காலில் விழுந்து கெஞ்சினார். போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று, எச்சரித்து அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !