உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.74 லட்சம் செலவில் வடிகால்வாய் சீரமைப்பு

ரூ.74 லட்சம் செலவில் வடிகால்வாய் சீரமைப்பு

சென்னை, தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட, 18 வார்டுகளிலும், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வடிகால்வாய் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.குறிப்பாக, தி.நகர், அபிபுல்லா சாலையில், 250 மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால்வாய் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி கூறியதாவது:தி.நகர் அபிபுல்லா சாலையில், மழைநீர் வடிகால்வாய் புனரமைப்பு பணிக்காக, 74 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.அதில், முதற்கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகள், இம்மாதம் இறுதிக்குள் முழுமையாக நிறைவடையும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை