உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.46 கோடி மதிப்பீட்டில் வடிகால்வாய் பணி துவக்கம்

ரூ.46 கோடி மதிப்பீட்டில் வடிகால்வாய் பணி துவக்கம்

பெருங்குடி,பெருங்குடி மண்டலம், 181க்கு உட்பட்ட கொட்டிவாக்கம், வார்டு -182க்கு உட்பட்ட பெருங்குடி ஆகிய பகுதிகளில், மழைநீர் வடிகால்வாய் பணி, நேற்று முன்தினம் துவங்கியது.இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:கொட்டிவாக்கத்தில், 7 சாலைகளில், 1.3 கி.மீ நீளத்திற்கு, 5 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், பெருங்குடியில் 69 சாலைகளில், 17 கி.மீ நீளத்திற்கு, 41 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், இத்திட்டம் அமையவுள்ளது.இத்திட்டம், கே.எப்.டபிள்யு., எனும் ஜெர்மன் டெவலப்மென்ட் வங்கியில், சென்னை பெருநகர வட்டார வளர்ச்சி ஆணையம் கடன் பெற்று, எம்., 2 கோவளம் வடிகால்வாய் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட உள்ளது.இக்கால்வாய், பகிங்ஹாம் கால்வாய் இணைக்கப்படும். இத்திட்டத்தை ஓராண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.நிகழ்வில், மண்டல குழு தலைவர், செயற்பொறியாளர் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !