உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பள்ளிக்கரணையில் வடிகால்வாய் பணி துவக்கம்

பள்ளிக்கரணையில் வடிகால்வாய் பணி துவக்கம்

பள்ளிக்கரணை :பெருங்குடி மண்டலம், வார்டு 189க்கு உட்பட்டது பள்ளிக்கரணை. இங்கு, 1.16 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மழைநீர் வடிகால்வாய் பணியை, சோழிங்கநல்லுார் தொகுதி எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ், நேற்று துவக்கி வைத்தார்.இப்பணி குறித்து, மாநகராட்சி அதிகாரி கூறியதாவது:மழைநீர் வடிகால்வாய் பணி, பள்ளிக்கரணை பெருமாள் நகரில் 178 மீ., நீளம், காமராஜ் நகரில் 128 மீ., நீளத்தில் அமைய உள்ளன.இக்கால்வாய்கள், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு செல்லும் கால்வாயுடன் இணைக்கப்படும்.மாநகராட்சி மூல நிதியின் கீழ் நடக்கும் இப்பணி, வடகிழக்கு பருவமழைக்கு முன் முடிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை