உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / முதியவரை சரமாரியாக தாக்கிய ஓட்டுனர், நடத்துனர் சஸ்பெண்ட்

முதியவரை சரமாரியாக தாக்கிய ஓட்டுனர், நடத்துனர் சஸ்பெண்ட்

சென்னை, :மாநகர பஸ்சில் இருந்து இறக்கி முதியவரை தாக்கிய ஓட்டுனர், நடத்துனர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.கிளாம்பாக்கம் - கோயம்பேடு பஸ் நிலையம் இடையே இயக்கப்படும், '70சி' வழித்தட மாநகர பஸ்சில், நேற்று காலை முதியவர் ஒருவர் ஏறியுள்ளார். அவரை, முதியோர் இருக்கையில் அமரக்கூடாது என, நடத்துனர் கூறியதாக தெரிகிறது. இதில், இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிந்தது. முதியவரை பஸ்சில் இருந்து இறக்கிய நடத்துனர், சரமாரியாக தாக்கினார். ஓட்டுநரும் பஸ்சை விட்டு இறங்கி வந்து, முதியவரை தாக்கினார். இதை பயணியர், வீடியோ எடுத்த வெளியிட்டனர்.இது தொடர்பாக, சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அளித்துள்ள விளக்கம்: வண்டலுார் கேட் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில் ஈடுபட்ட பஸ் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் உடனடியாக 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளனர்.இதுபோன்ற நிகழ்வுகள் இனி வரும் காலங்களில் நடக்காத வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. **


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை