உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இரும்பு சங்கிலியால் டிரைவர் மீது தாக்கு

இரும்பு சங்கிலியால் டிரைவர் மீது தாக்கு

கீழ்ப்பாக்கம், அமைந்தகரை பி.பி., தோட்டம் 4வது தெருவைச் சேர்ந்தவர் நரேஷ், 25; 'டாடா ஏஸ்' லோடு வாகனம் ஓட்டுநர். இவர், இரு தினங்களுக்கு முன் கீழ்ப்பாக்கம், மில்லர் சாலையோரத்தில் நின்றிருந்தபோது, அவ்வழியாக வந்த சிலர் வீண் தகராறு செய்து உள்ளனர்.இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு நரேஷ் மதுபோதையில் அழகப்பா சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அதே கும்பல், நரேஷிடம் வீண் தகராறு செய்து, இரும்பு சங்கிலியால் தாக்கி தப்பினர். இது குறித்து, நரேஷ் நேற்று மதியம் போலீசில் புகார் அளித்தார். கொலை செய்யும் நோக்கத்துடன் அந்த கும்பல் ஈடுபட்டதா என்ற கோணத்தில், போலீசார் அந்த கும்பலை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை