பள்ளி மாணவ - மாணவியர் போதை ஒழிப்பு விழிப்புணர்வு
ஆலந்துார், போதை ஒழிப்பு குறித்து, மாணவ - மாணவியர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.புனித தோமையார் மலை பகுதியில் அமைந்துள்ள மாண்ட்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பாக, போதை ஒழிப்பு குறித்து, விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.பள்ளி சாரண சாரணியர் இயக்கம், தேசிய மாணவர் படை, சாலை பாதுகாப்புப் படை மாணவ - மாணவியர் 350 பேர், போதை ஒழிப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கைகளில் ஏந்தி, 2 கி.மீ., துாரம் பேரணி சென்றனர்.பள்ளி முதல்வரும், தாளாளருமான ஸ்டீபன் சேவியர், துணை முதல்வர் பாக்கியநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஆலந்துார் மகளிர் நீதிமன்ற நீதிபதி தீபிகா ஹேம்குமார், புனித தோமையர் மலை காவல் துணை ஆணையர் சீனிவாசன் ஆகியோர், பேரணியை துவக்கி வைத்தனர்.