மேலும் செய்திகள்
சிட்டி கிரைம்
11-Jul-2025
வியாசர்பாடி: வியாசர்பாடியில், வாலிபர்களால் கட்டையால் தாக்கப்பட்ட முதியவர் உயிரிழந்தார்; இருவர் கைது செய்யப்பட்டனர்.வியாசர்பாடி, ஜீவா ரயில் நிலையம் அருகே, கடந்த 31ம் தேதி அதிகாலை 3:00 மணியளவில், 60 வயது மதிக்கத்தக்க முதியவரை, இருவர் சரமாரியாக கட்டையால் தாக்கினர்.அங்கிருந்தவர்கள் சத்தம் போடவே, இருவரும் தப்பியோடினர். வியாசர்பாடி போலீசார் முதியவரை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஒரு வாரமாக தீவிர பிரிவில் சிகிச்சை பெற்று வந்த முதியவர், நேற்று உயிரிழந்தார். இதையடுத்து, கொலையாளிகளான வியாசர்பாடி, கன்னிகாபுரத்தைச் சேர்ந்த கார்த்திக், 23, வியாசர்பாடி, சஞ்சய் நகரைச் சேர்ந்த அலெக்ஸ், 27, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். முதியவரை கொலை செய்தது குறித்து, போலீசாரிடம் கார்த்திக் அளித்த வாக்கு மூலம்: சம்பவத்தன்று அதிகாலை என் சகோதரியின் மகளுக்கு, முதியவர் பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் ஆத்திரமடைந்து, என் நண்பர் அலெக்ஸுடன் சேர்ந்து முதியவரை தாக்கினேன். இவ்வாறு அவர் கூறினார். கொலை செய்யப்பட்ட முதியவர் குறித்த விபரங்களை, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
11-Jul-2025