உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  கால்வாயில் மூழ்கி முதியவர் பலி

 கால்வாயில் மூழ்கி முதியவர் பலி

செங்குன்றம்: புழல் ஏரி உபரி நீர் கால்வாயில் மீன்பிடித்தவர் நீரில் மூழ்கி பலியானார். செங்குன்றம், புழல் ஏரி உபரிநீர் செல்லும் கால்வாயில், வடகரை மேம்பாலம் கீழே நேற்று பகல் 12:00 மணியளவில், முதியவர் ஒருவர் தண்ணீரில் மூழ்கி இறந்து கிடப்பதாக, செங்குன்றம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை மீட்டு விசாரிக்கையில், இறந்தவர் சோழவரத்தைச் சேர்ந்த கோவிந்தன், 75, என்பதும், கால்வாயில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது வலை சிக்கியதால், அதை எடுக்க முயன்றவர் நீரில் மூழ்கி பலியானதும் தெரிய வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை