மேலும் செய்திகள்
டாக்டர்கள் அலட்சியம் கர்ப்பத்தில் உயிரிழந்த சிசு
31-Dec-2024
திரு.வி.க., நகர், திரு.வி.க., நகர், வெற்றி நகர் கோவிந்தசாமி தெரு பகுதியில் வசித்தவர் கேசவமூர்த்தி, 61. மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த இவர், அம்பத்துாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.நேற்று முன்தினம் காலை 7:30 மணிக்கு, துாங்கி எழுந்த கேசவமூர்த்தி, வீட்டில் சிகரெட் பற்ற வைக்க லைட்டரை அழுத்திய போது, அதில் இருந்த காஸ் வெடித்து, அவரின் உடல் முழுதும் தீப்பற்றியது.அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, போலீசுக்கும் தகவல் அளித்தனர்.மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற கேசவமூர்த்தி, மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு, 60 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
31-Dec-2024