உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  முதியவரை திசை திருப்பி  ரூ.1.50 லட்சம் பறிப்பு

 முதியவரை திசை திருப்பி  ரூ.1.50 லட்சம் பறிப்பு

கே.கே., நகர் : நெசப்பாக்கம், டாக்டர் கான் நகரைச் சேர்ந்தவர் கன்னியப்பன், 65. இவர், கே.கே., நகர், முனுசாமி சாலையில் உள்ள வங்கியில், தன் கணக்கில் இருந்து நேற்று காலை ஒரு லட்சம் ரூபாய் எடுத்தார். மற்றொரு வங்கியில் 50,000 ரூபாய் எடுத்தார். இப்பணத்தை மஞ்ச பையில் வைத்து, சைக்கிளில் வீடு திரும்பினார். அவருக்கு பின்னால் பைக்கில் வந்த மர்ம நபர், கன்னியப்பனிடம் தங்கள் பொருள் கீழே விழுந்ததாக கூறினார். என்ன பொருளாக இருக்கும் என நினைத்துக்கொண்டே சைக்கிளை ஓரமாக நிறுத்தி, நடந்து சென்றபோது, பணப்பையை மர்ம நபர் எடுத்துச் சென்றார். கன்னியப்பன் அளித்த புகாரையடுத்து, கே.கே., நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை