மேலும் செய்திகள்
அழுகிய ஆண் உடல் மீட்பு
16-Jul-2025
சென்னை :தங்கும் விடுதியில் அழுகிய நிலையில் கிடந்த முதியவர் உடல் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். மதுரையைச் சேர்ந்தவர் நாகராஜ், 74. இவர், ராயப்பேட்டை ஜி.பி., சாலையில் உள்ள தங்கும் விடுதியில், மாத வாடகையில் தங்கி, கார் உதிரி பாகங்கள் பொருத்தும் பணி செய்து வந்தார். அவர் தங்கியிருந்த அறையில் இருந்து, நேற்று முன்தினம் இரவு கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. விடுதி ஊழியர்கள் அண்ணாசாலை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அழுகிய நிலையில் நிர்வாணமாக முதியவரின் உடல் கிடந்துள்ளது. உடலை மீட்ட போலீசார், விசாரித்து வருகின்றனர்.
16-Jul-2025