உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மூதாட்டியிடம் ரூ.2 லட்சம் மோசடி

மூதாட்டியிடம் ரூ.2 லட்சம் மோசடி

சென்னை: வங்கியில் இருந்து பேசுவதாக, மூதாட்டியிடம் 2 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். பெசன்ட் நகரைச் சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு, இரண்டு வாரத்திற்குமுன், எஸ்.பி.ஐ., வங்கி கிளை மேலாளர் பேசுவதாக, மொபைல் போன் அழைப்பு வந்தது. உங்கள் தனிப்பட்ட வங்கி கணக்கை எளிதாக்குவதாக கூறிய நபர், வாட்ஸாப்பில் ஒரு 'லிங்க்'கை அனுப்பி உள்ளார். அதை, மூதாட்டி போனில் பதிவேற்றம் செய்துள்ளார். மேலும், வங்கியில் சென்று விசாரித்துள்ளார். அப்போது ஏமாற்றப்பட்டதும், மூதாட்டியின் வங்கி கணக்கில் இருந்து, 2 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டதும் தெரிந்தது. இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை