உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பைக் மோதி மூதாட்டி பலி

பைக் மோதி மூதாட்டி பலி

அரசன்கழனி: வேளச்சேரி அடுத்த அரசன்கழனியைச் சேர்ந்தவர் மாரி, 75. இவர், நேற்று முன்தினம் மதியம் 2:00 மணிக்கு, அதே பகுதியில் உள்ள கோவிலுக்கு செல்ல, காரணை -- சித்தாலப்பாக்கம் பிரதான சாலையை, மையத்தடுப்பு இடைவெளி வழியே கடந்தார். அப்போது, செம்மஞ்சேரியை சேர்ந்த விக்னேஷ், 25, என்பவர் வந்த, கே.டி.எம்., இருசக்கர வாகனம், எதிர்பாராத விதமாக மூதாட்டி மீது மோதியது. இதில், பலத்த காயம் அடைந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்தில், விக்னேசும் கீழே விழுந்து காயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், மூதாட்டி உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !