உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  மின்வடங்கள் சீரமைப்பு

 மின்வடங்கள் சீரமைப்பு

ராயபுரம்: தினமலர் செய்தி எதிரொலியாக, புதை மின் வடங்கள் முறையாக புதைக்கப்பட்டன. ராயபுரம் கல்லறை சாலையில், மின்வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதன் எதிரே உள்ள மின் இணைப்பு பெட்டி சாய்ந்த நிலையிலும், புதை மின் வடங்கள் அதன் அருகே முறையாக புதைக்கப்படாமலும் இருந்தன. இதனால் மகப்பேறு மருத்துவமனைக்கு, கர்ப்பிணியர் நடந்து செல்லும்போது, மின் விபத்து ஏற்படும் அபாயம் இருந்தது. இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, சாய்ந்த மின் இணைப்பு பெட்டி மாற்றி அமைக்கப்பட்டு, மின்வடங்களும் முறையாக புதைக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ