உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  சென்னையில் முதல்முறையாக 50 மாடி கட்டடம்: இமாமி நிறுவனம் கட்டுகிறது

 சென்னையில் முதல்முறையாக 50 மாடி கட்டடம்: இமாமி நிறுவனம் கட்டுகிறது

சென்னை: சென்னை பழைய மாமல்லபுரம் சாலை, ஏகாட்டூர் பகுதியில் முதல் முறையாக, 50 மாடி குடியிருப்பு கட்டடத்தை, 'இமாமி' நிறுவனம் கட்ட உள்ளது. சென்னை மற்றும் புறநகரில் அதிக உயரமான கட்டடங்கள் அரிதாக இருந்தன. கடந்த, 2008ம் ஆண்டில் சி.எம்.டி.ஏ., வெளியிட்ட இரண்டாவது முழுமை திட்டத்தில், கட்டடங்களின் உயர கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது. இதையடுத்து, பழைய மாமல்லபுரம் சாலையில் ஏகாட்டூர், ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் போன்ற இடங்களில், குறிப்பிட்ட சில தனியார் கட்டுமான நிறுவனங்கள், 20 முதல் 45 மாடிகள் வரையிலான கட்டடங்களை கட்டுகின்றன. பெரம்பூர் உட்பட சில இடங் களில், 45 மாடி வரையிலான கட்டடங்கள் உள்ளன. இந்நிலையில், பழைய மாமல்லபுரம் சாலை ஏகாட்டூரில், 'இமாமி' நிறுவனம், 'இமாமி தேஜோமயா' என்ற பெயரில், 50 மாடிகள் வரையிலான அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தை செயல்படுத்த உள்ளது. மொத்தம் 9.50 ஏக்கர் நிலத்தில், 234 வீடுகளுடன், 50 மாடி குடியிருப்பு கட்டடம்; 291 வீடுகளுடன், 28 மாடி குடியிருப்பு கட்டடம் கட்டப்பட உள்ளது. இத்துடன், 9 மாடியில் மற்றொரு குடியிருப்பு கட்டடமும் கட்டப்பட உள்ளது. கிளப் ஹவுஸ், ஜிம், பூங்கா, விளையாட்டு வளாகம் என, பல்வேறு வசதிகளுடன் இத்திட்டம் அமைய உள்ளது. முதல் முறையாக, 50 அடி உயரத்துக் கு கட்டடம் கட்டப்பட உள்ளதால், இதற்கான ஒப்புதல் பெறும் பணிகளில், சம்பந்தப்பட்ட நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக, ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை