உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  மின் துாக்கி அறுந்து விழுந்து ஊழியர் காயம்

 மின் துாக்கி அறுந்து விழுந்து ஊழியர் காயம்

ராயபுரம்: ராயபுரம், ஏகவள்ளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாபு, 56. இவர், மின்துாக்கி பழுது பார்க்கும் வேலை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம், ராயபுரம், காமராஜர் பார்க் சந்தில் உள்ள பிரியாணி உணவு கிடங்கில் இருந்த மின் துாக்கியை பழுது பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, மின் துாக்கி திடீரென அறுந்து விழுந்தது. அதில், அவருக்கு வலது தொடை மற்றும் இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரை மீட்ட சக ஊழியர்கள், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி