உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தனியார் சார்பில் வேலைவாய்ப்பு முகாம்

தனியார் சார்பில் வேலைவாய்ப்பு முகாம்

சென்னைகருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு நாளை, மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில், கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, 100வது மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், சென்னை ராணி மேரி கல்லுாரியில், நாளை காலை 8:00 முதல் மாலை 3:00 மணி வரை நடக்கிறது.இதில், 300க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்களில் இருந்து, 30,000த்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.எட்டாம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு உள்ளிட்ட அனைத்து நபர்களும் பங்கேற்கலாம்; அனுமதி இலவசம்.பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள், www.tnprivatejobs.tn.gov.inஎன்ற இணைதளத்தில் பதிவு செய்யலாம் என, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை