உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மகப்பேறு மருத்துவமனைக்கு ரூ.50 லட்சத்தில் உபகரணங்கள்

மகப்பேறு மருத்துவமனைக்கு ரூ.50 லட்சத்தில் உபகரணங்கள்

திருவொற்றியூர்,திருவொற்றியூர், எல்லையம்மன் கோவில் பேருந்து நிறுத்தம் அருகே, சென்னை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை செயல்படுகிறது.இந்த மருத்துவமனைக்கு, தனியார் பங்களிப்புடன், மாநகராட்சியின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ், 50 லட்சம் ரூபாய் செலவில், மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி, மண்டல குழு தலைவர் தனியரசு தலைமையில் நடந்தது.நிகழ்ச்சியில், தடுப்பூசி மருந்து பாதுகாப்பு பெட்டகம், ஐஸ் பாக்ஸ், ஸ்கேன் இயந்திரம் உள்ளிட்டவற்றை, வடசென்னை தி.மு.க., - எம்.பி., கலாநிதி, திருவொற்றியூர் எம்.எல்.ஏ., சங்கர் ஆகியோர் பங்கேற்று வழங்கினர்.இந்நிகழ்ச்சியில், மண்டல உதவி கமிஷனர் புருஷோத்தமன், செயற்பொறியாளர் பாபு உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை