மேலும் செய்திகள்
செங்குன்றம், ஆவடியில் 21 கிலோ கஞ்சா பறிமுதல்
05-Mar-2025
மடிப்பாக்கம், மடிப்பாக்கம் பகுதியில், போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பைக்கில் வந்த இருவர், போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்தபோது, கஞ்சா போதையில் இருந்தது தெரியவந்தது.இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். இதில், அவர்கள் மடிப்பாக்கம், அம்பேத்கர் சாலையை சேர்ந்த சாய்ராம், 19, கீழ்க்கட்டளை, தேன்மொழி நகரை சேர்ந்த பெருமாள், 22, என்பது தெரிந்தது.பழைய குற்றவாளிகளான இவர்கள் மீது, மடிப்பாக்கம், பழவந்தாங்கல் காவல் நிலையங்களில், பல வழக்குகள் உள்ளதும். பெருமாள் மீது போதை பொருள் கடத்தல் வழக்கு உள்ளதும் தெரியவந்தது.திருட்டு நோக்கத்துடன் கஞ்சா போதையில் சுற்றி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
05-Mar-2025