உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அம்பத்துார் ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை நீட்டிப்பு

அம்பத்துார் ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை நீட்டிப்பு

திருவள்ளூர்,:அம்பத்துார் அரசினர் தொழிற்பயிற்சி மையத்தில் மாணவர் சேர்க்கை, வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:அம்பத்துார் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், எட்டு, 10ம் வகுப்பு தேர்ச்சி; பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு பல்வேறு தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சிக்கான விண்ணப்பம் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில், கடந்த மே 10ம் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது.இப்பயிற்சிக்கான கால அவகாசம், வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. எனவே, பயிற்சியில் சேர விரும்புவோர், உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்ப கட்டணம் 50 ரூபாயுடன் நேரிலோ அல்லது www.skilltraining.tn.gov.inஎன்ற இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ