மேலும் செய்திகள்
ரூ.4.64 கோடி மோசடி ஆவடி பெண் கைது
30-Sep-2025
ஆவடி: முதல்வர், எம்.பி., அமைச்சர், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை நன்கு தெரியும் எனக் கூறி, பலரிடம் பண மோசடியில் ஈடுபட்ட போலி சாமியார் சிக்கினார். ஆவடி, நந்தவனம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன், 54. இவர், சாமியார் ஒருவர் தன்னிடம் பணமோசடியில் ஈடுபட்டதாக, ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். ரூ.20 லட்சம் அதில் அவர் குறிப்பிடப்பட்டிருந்ததாவது: திருமுல்லைவாயில், வைஷ்ணவி நகரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருப்பவர் ஸ்ரீனிவாசன், 32. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இவர், தன்னை சாமியார் என்றும், பா.ஜ., பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள், எம்.பி., அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பலரை தெரியும் எனக் கூறினார். எனக்கு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு வாங்கித் தருவதாக கூறினார். இதை நம்பி, என் நண்பர்கள், உறவினர்கள் என 18க்கும் மேற்பட்டோரிடம் 20 லட்சம் ரூபாய் வாங்கி கொடுத்தேன். ஆனால், வீடும் வாங்கி தரவில்லை. பணத்தையும் தரவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார். இறுதி சடங்கு ஆவடி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெகநாதன், எஸ்.ஐ., சிவகுமார் தலைமையிலான போலீசார், ஸ்ரீனிவாசனை தேடி வந்தனர். இந்நிலையில், திருமுல்லைவாயில், நாகம்மை நகரில் உறவினரின் இறுதி சடங்குக்கு ஸ்ரீனிவாசன் நேற்று வந்தபோது, போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில், ஸ்ரீனிவாசன், போலியாக சாமியார் வேடம் அணிந்து, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் தமிழிசை உள்ளிட்ட பல பிரபலங்களுடன் புகைப்படம் எடுத்து வைத்து, அவர்களை நன்கு தெரியும் எனக் கூறி, பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. தீவிர விசாரணை தவிர, திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கல்லுாரி பேராசிரியர் ராமானுஜம், 72 என்பவரிடம், பா.ஜ.,வில் மாநில பொறுப்பு வாங்கி தருவதாக கூறி, 44 லட்சம் ரூபாய் வாங்கி கொண்டு, பணத்தை தராமல் ஏமாற்றியதும் தெரிய வந்தது. மேலும் இவர் எத்தனை பேரை ஏமாற்றியுள்ளார் என, ஆவடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
30-Sep-2025