உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மகனிடம் பணம் பறித்ததை தட்டிகேட்ட தந்தைக்கு தாக்கு

மகனிடம் பணம் பறித்ததை தட்டிகேட்ட தந்தைக்கு தாக்கு

கொடுங்கையூர், மகனிடம் பணம் பறித்ததை தட்டிக் கேட்க சென்ற தந்தையை, மதுபாட்டிலால் தாக்கியவரை, போலீசார் கைது செய்தனர்.கொடுங்கையூர் எழில் நகர், ஏ - பிளாக்கைச் சேர்ந்த செந்தில்குமார், 42, கொருக்குப்பேட்டையில் உள்ள ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.இரு தினங்களுக்கு முன், இவரது மகன் சீனிவாசன், கொடுங்கையூர், எழில் நகர், டாஸ்மாக் கடை அருகே நடந்து சென்றுக் கொண்டிருந்தார்.அப்போது, அவரை வழிமறித்த சிலர், சீனிவாசனின் மேல்பாக்கெட்டில் இருந்து, 400 ரூபாயை பறித்துக்கொண்டனர். தகவலறிந்து, அங்கு வந்த சீனிவாசனின் தந்தை செந்தில்குமார், மகனிடம் பணம் பறித்தது குறித்து தட்டிக் கேட்டுள்ளார். அப்போது, மர்ம கும்பலைச் சேர்ந்த ஒருவர், பீர் பாட்டிலால் அவரை தாக்கியுள்ளார். இதில், செந்தில்குமாருக்கு, இடது தாடை, பின் தலையில் மற்றும் உதட்டில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவம் குறித்து, கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து, தாக்குதலில் தொடர்புடைய கொடுங்கையூர் எழில் நகரை சேர்ந்த சரவணன், 28, என்பவரை, நேற்று கைது செய்து, விசாரணைக்கு பின் சிறையில் அடைத்தனர்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி