உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆபத்தான வகையில் உள்ள மின்வடத்தால் அச்சம்

ஆபத்தான வகையில் உள்ள மின்வடத்தால் அச்சம்

விருகம்பாக்கம்:விருகம்பாக்கத்தில், உடைந்த மழைநீர் வடிகால் பள்ளத்தையும், அதன் அருகே ஆபத்தான முறையில் செல்லும் மின் வடங்களையும் சீர் செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.கோடம்பாக்கம் மண்டலம் விருகம்பாக்கம் 129வது வார்டில், அண்ணாமலை காலனி உள்ளது. இத்தெருவின் நுழைவு பகுதியில், மழைநீர் வடிகால் உடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது.அத்துடன், இந்த பள்ளத்தின் அருகே, மின் இணைப்பு பெட்டிகள் அமைந்துள்ளன. இந்த மின் பெட்டியில் இருந்து செல்லும் மின் வடங்கள், ஆபத்தான முறையில் வெளிப்புறமாக செல்கின்றன.இந்த வடங்களை பிளாஸ்டிக் கயிறால், அருகில் உள்ள கம்பத்தில் கட்டி வைத்துள்ளனர். எனவே, இந்த மழைநீர் வடிகால் பள்ளம் மற்றும் உயிர் பலி ஏற்படுத்தும் வகையில் உள்ள மின் வடங்களையும்சீர் செய்ய வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி