உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கிண்டி தனியார் விடுதியில் அரசு பெண் ஊழியர் தற்கொலை

கிண்டி தனியார் விடுதியில் அரசு பெண் ஊழியர் தற்கொலை

கிண்டி,; கிண்டியில் உள்ள தனியார் விடுதியில், அரசு பெண் ஊழியர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கன்னியாகுமரி மாவட்டம், மஞ்சிரவிளையைச் சேர்ந்தவர் ஜான்பிரைட் மகள் மவிஜா, 24. இவருக்கு, கடந்த மார்ச் மாதம் திருமணம் நடந்தது. மூன்றாவது நாளில், கணவரை பிரிந்து, தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி., போட்டி தேர்வில் வெற்றி பெற்ற இவருக்கு, கிண்டியில் உள்ள வேளாண்மை துறை அலுவலகத்தில், ஸ்டெனோகிராபர் பணி கிடைத்துள்ளது. மே மாதம் பணியில் சேர்ந்தார். கிண்டி, ஈக்காட்டுதாங்கல் பகுதியில் உள்ள ஒரு பெண்கள் விடுதியில் தங்கி இருந்தார். சில நாட்களாகவே மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று, அவர் தங்கியிருந்த விடுதி அறை நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்ததால், கிண்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார், கதவை உடைத்து பார்த்தபோது, மவிஜா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. திருமணமாகி ஆறு மாதங்களே ஆவதால், ஆர்.டி.ஓ.. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !