உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  காத்திருப்போர் பட்டியலில் பெண் இன்ஸ்., உதவி ஆய்வாளர்

 காத்திருப்போர் பட்டியலில் பெண் இன்ஸ்., உதவி ஆய்வாளர்

சென்னை: போதைப் பொருள் வழக்கில் பிடிபட்ட மூவரில் இருவரை விடுவித்த அண்ணாநகர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு பெண் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகிய இருவரும், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அண்ணா நகர் மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் சுமதி, உதவி ஆய்வாளர் மகாலட்சுமி ஆகிய இருவரும், போதைப் பொருள் வைத்திருந்த மூவரை, சமீபத்தில் பிடித்தனர். இதில் ஒருவரை மட்டும் கைது செய்து, மற்ற இருவரை விடுவித்தனர். இதையறிந்த நுண்ணறிவு போலீசார், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதிகாரிகள் நடத்திய விசாரணையில், வழக்கில் இருந்து இருவரை விடுவித்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்படி, ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகிய இருவரும், நேற்று, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை