உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விமானத்தில் பெண் பயணி உயிரிழப்பு

விமானத்தில் பெண் பயணி உயிரிழப்பு

சென்னை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் ஒன்றான துபாய் நகரில் இருந்து, 'எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்' விமானம், நேற்று அதிகாலை 268 பயணியருடன், மலேஷியா தலைநகர் கோலாலம்பூருக்கு சென்று கொண்டிருந்தது.விமானம் நடுவானில் செல்லும்போது, மலேஷியா நாட்டைச் சேர்ந்த பெண் பயணியான ரஷிதா அகமத், 57, என்பவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.விமானம், சென்னை வான்வெளியில் பறந்து கொண்டு இருப்பதை அறிந்த விமானி, டில்லியில் உள்ள தலைமை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.அனுமதி கிடைத்ததையடுத்து, சென்னை சர்வதேச விமான நிலையத்தில், நேற்று காலை அவசரமாக தரையிறங்கியது. விமான நிலைய மருத்துவக்குழுவினர், விமானத்துக்குள் ஏறி ரஷிதாவை சோதித்தனர். இதில், அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. விசாரணையில், சவுதி அரேபியா ஜெட்டா நகருக்கு புனித பயணமாக சென்று விட்டு, மீண்டும் மலேஷியா திரும்பி செல்லும்போது, இந்த சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை