உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மொபைல் டவரில் தீ

மொபைல் டவரில் தீ

மணலி,மணலி, சடையங்குப்பம் - பர்மா நகரைச் சேர்ந்தவர் செல்வராஜ், 55. இவரது வீட்டின் மாடியில், ஏர்டெல் மற்றும் வோடபோன் அலைவரிசை உடைய 60 அடி உயர மொபைல் போன் டவர் உள்ளது.நேற்று அதிகாலை, இந்த மொபைல் டவரின் கீழ் வைக்கப்பட்டிருந்த, கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் அடங்கிய பெட்டியில், திடீரென தீப்பற்றி எரிய துவங்கியது.தீ மளமளவென பற்றி எரிந்ததால், பீதியடைந்த அக்கம் பக்கத்தினரின் தகவலையடுத்து, மணலி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, தீயை அணைத்தனர்.எனினும், கட்டுப்பாட்டு கருவி, ஜெனரேட்டர் உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான, பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின. சாத்தாங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை