உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெட் தொழிற்சாலையில் தீ

பெட் தொழிற்சாலையில் தீ

குன்றத்துார், குன்றத்துார் அருகே திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டையில், 'நியூ பாத்திமா பேன்சி பெட்டிங்ஸ்' என்ற பெயரில் சிறிய தொழிற்சாலை இயங்குகிறது. இங்கு, பெட், தலையணைகள் தயாரிக்கப்படுகின்றன.இந்நிலையில், நேற்று மாலை இந்த தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாம்பரம் தீயணைப்பு நிலைய வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் தொழிற்சாலையில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாயின. மின் விபத்தால் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என, குன்றத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை