மேலும் செய்திகள்
முதல்வர் அலுவலகம் பெயரில் மிரட்டும் அதிகாரி!
11-Sep-2025
ஐ.சி.எப்., :ஐ.சி.எப்., அடுத்த பெரம்பூர் ரயில்வே கேரேஜில் ஏற்பட்ட தீ விபத்தில், இரு ஊழியர்கள் பலத்த காயமடைந்தனர். ஐ.சி.எப்., அடுத்த பெரம்பூர் பகுதியில், தெற்கு ரயில்வேக்கு சொந்தமான, 'வேகன் அண்டு ஒர்க்ஸ்' என்ற கேரேஜ் செயல்படுகிறது. இங்கு, பழைய ரயில்கள் பராமரிப்பு மற்றும் பழுது பார்க்கும் பணிகள் நடக்கின்றன. நேற்று மதியம், 'நியூ ஷெட்' பகுதியில், ஊழியர்கள் இருவர், ஒரே ரயில் பெட்டியில், 'டிங்கரிங்' மற்றும் 'பெயின்ட்' அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 'டிங்கரிங்' தீப்பொறியானது, கீழே கிடந்த 'பெயின்ட்' தின்னர் மீது பட்டு, மளமளவென தீப்பிடிக்க துவங்கியது. அங்கிருந்த சக பணியாளர்கள், உடனடியாக தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதில், ஊழியர்கள் கணேசன், காமராஜ் ஆகியோருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அவர்கள், ஐ.சி.எப்., மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நேரத்தில் இரு பணிகளில் ஈடுபட்டதால் விபத்து ஏற்பட்டதாக, ரயில்வே அதிகாரிகள் கூறினர். இதுகுறித்து, ஐ.சி.எப்., போலீசார் விசாரிக்கின்றனர்.
11-Sep-2025