காயலான் கடையில் தீ விபத்து
ஆவடி, ஆவடியில் காயலான் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. ஆவடி, பாணவேடு தோட்டம் கண்ணப்பாளையத்தில், காயலான் கடை நடத்தி வருபவர் மைக்கேல், 38. நேற்று காலை 6:30 மணியளவில், இவரது கடையில் தீ விபத்து ஏற்பட்டது. பூந்தமல்லி தீயணைப்புத் துறையினர், தீயை அணைத்தனர். அதற்குள் 15,000 ரூபாய் மதிப்பிலான பழைய பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமாகின.