உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அழகு நிலையத்தில் தீ பொருட்கள் எரிந்து நாசம்

அழகு நிலையத்தில் தீ பொருட்கள் எரிந்து நாசம்

தி.நகர், தி.நகரில் உள்ள அழகு நிலையத்தில் ஏற்பட்ட தீயில் அழகுசாதன பொருட்கள், உபகரணங்கள் நாசமாகின.தி.நகர், வடக்கு உஸ்மான் சாலையில் நான்கு மாடி வணிக வளாகம் உள்ளது. இதில், 25க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. கீழ் தளத்தில் செயல்படும் அழகு நிலையம் ஒன்றில், நேற்று தீப்பிடித்து புகை வந்தது. தி.நகர் தீயணைப்பு துறை வீரர்கள் வந்து தண்ணீரை அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.தீயில், அழகு நிலையத்தில் உள்ள அழகுசாதன பொருட்கள், உபகரணங்கள் ஆகியவை எரிந்து நாசமாகின.பாண்டி பஜார் போலீசார் விசாரிக்கின்றனர். அந்த ஒரு கடையில் மட்டும் மின் கசிவால் தீப்பற்றியதாகவும், மற்ற கடைகளுக்கு எந்த சேதாரமும் இல்லை என, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ