மேலும் செய்திகள்
சாலையில் சென்ற கார் தீப்பற்றி எரிந்து நாசம்
25-Jun-2025
அம்பத்துார்:அம்பத்துார் ஓ.டி., பேருந்து நிலையம் பின்புறம் உள்ள, வடக்கு பூங்கா சாலையில், கர்நாடகா வங்கி செயல்பட்டு வருகிறது. வங்கியில் பின்பக்கத்தில் இருந்து, நேற்று காலை கரும்புகை வெளியேறியது.இது குறித்து அம்பத்துார் தொழிற்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.அதற்குள் மேலாளர் அறை உள்ளிட்ட ஒரு சில அறைகளில் தீ மளமளவென பரவியது. இதில், அங்கிருந்த சில ஆவணங்கள் எரிந்து நாசமாயின. அதேநேரம், பணம், நகைகள், லாக்கர் உள்ளிட்டவை தீ விபத்தில் இருந்து தப்பின.அம்பத்துார் போலீசாரின் விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது.
25-Jun-2025