உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காசிமேடில் வெள்ளை வவ்வால் மீனுக்கு கிராக்கி கடம்பா வரத்து மிகுதியால் மீன் பிரியர்கள் மகிழ்ச்சி

காசிமேடில் வெள்ளை வவ்வால் மீனுக்கு கிராக்கி கடம்பா வரத்து மிகுதியால் மீன் பிரியர்கள் மகிழ்ச்சி

காசிமேடு:காசிமேடு மீன் சந்தையில், வெள்ளை வவ்வால் மீன்களை போட்டி போட்டு மக்கள் வாங்கி சென்றதால், தேவை அதிகரித்து வஞ்சிரத்தை விட அதிக விலைக்கு விற்பனையானது. மேலும், கடம்பா வரத்து மிகுதியால், மீன் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சென்னை, காசிமேடு மீன்பிடி சந்தையில், விடுமுறை நாளான நேற்று அதிகாலை முதல், மீன் வரத்து அதிகம் இருந்தது. ஆழ்கடலுக்குச் சென்ற விசைப்படகுகள், அதிகளவில் கரை திரும்பியதால், வஞ்சிரம், வவ்வால் உள்ளிட்ட பெரிய மீன் வகைகள் விற்பனைக்கு வந்தன. இதில், வலையில் சிக்கிய வஞ்சிரம் அதிகபட்சம், 900 ரூபாய்க்கும், துாண்டிலில் பிடிபட்ட வஞ்சிரம், 1,000 ரூபாய்க்கும் விற்பனையானது. காசிமேடில், விலை அதிகம் விற்பனையாகும் வஞ்சிரத்திற்கு சவால் விடும் வகையில், வெள்ளை வவ்வால், கிலோ 1,300 ரூபாய் வரை விற்கப்பட்டது. இருந்தும் மக்கள் போட்டி போட்டு பேரம் பேசி வாங்கி சென்றனர். தவிர, அம்மனுக்கு கூழ் வார்த்தல் மற்றும் கும்பல் படையல் போடும் நிகழ்விற்காக, சிறிய அளவிலான சங்கரா, காரப்பொடி, சீலா, கானாங்கத்தை உள்ளிட்ட மீன் வகைகளை, மக்கள் அதிகளவில் வாங்கிச் சென்றனர். இறைச்சிக்கு ஈடாக கருதப்படும் கடம்பா வரத்து மிகுதியாக இருந்தது. நான்கு வகைகளில், 25 - 250 ரூபாய் வரை விலையில் விற்பனையானது. காரப்பொடி, ஒரு கூடையே, 500 ரூபாய் என்ற அளவில் மலிவாக விற்றது குறிப்பிடத்தக்கது. மீன் வகை- கிலோ(ரூ.) வஞ்சிரம் 950 - 1,000 கருப்பு வவ்வால் 800 - 900 வெள்ளை வவ்வால் 1,200 - 1,300 தேங்காய் பாறை 500 - 600 இறால் 450 - 500 டைகர் இறால் 1,000 - 1,200 சங்கரா 250 - 300 கானாங்கத்தை 200 - 250 நண்டு 250 - 400 கவளை 50 - 100 காரப்பொடி 25 -50 கடம்பா (நான்கு வகை) 25 - 250

புரட்டாசி வரை மவுசு

ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் பிறந்தாலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், ஒன்பதாவது வாரம் வரை, வீடுகள் - அம்மன் கோவில்களில் கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடைபெறும். எனவே, ஆவணி மாதம் முழுதும் கூட மீன் விற்பனை அமோகமாக இருக்கும். எனவே, புரட்டாசி வரை காசிமேடு மீன்பிடி சந்தைக்கான மவுசு குறையாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி