உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காசிமேட்டில் மீன்விலை உயர்வு

காசிமேட்டில் மீன்விலை உயர்வு

காசிமேடு:கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில், தமிழகத்தில் ஆண்டுதோறும், 61 நாட்கள் தடை விதிக்கப்படுவது வழக்கம்.இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் ஏப்., 15ம் தேதி துவங்கியது. ஜூன் 14ம் தேதி நள்ளிரவு வரை தடைக்காலம் அமலில் உள்ளது.தடை காரணமாக, மீனவர்கள் விசைபடகுகளை தவிர்த்து, பைபர் படகுகளை கொண்டு, கரை ஓரமாக மீன் பிடித்து காசிமேடு பழைய மீன் ஏலக்கூடத்தில் விற்பனை செய்து வருகின்றனர். நேற்று ஞாயிற்று கிழமை விடுமுறை என்பதால் 40க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் சென்று மீன் பிடித்து விற்பனைக்கு கொண்டு வந்தனர். மக்கள் கூட்டம் அதிகம் இருந்ததால், மீன் விலை உயர்ந்தது. மீன் விலை நிலவரம்மீன் வகை கிலோ (ரூ.)வஞ்சிரம் 1600 - 1800சூரை 300 - 400பாறை 500 - 800கொடுவா 1000 - 1100சங்கரா 600 - 700பர்லா 300 - 400கவல 200 - 250நெத்திலி 300 - 400கடல் விரால் 700 - 900மத்தி 250 - 300இறால் 500 - 600நண்டு 300 - 500


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ