உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காசிமேடில் மீன் விலை உயர்வு

காசிமேடில் மீன் விலை உயர்வு

காசிமேடு: காசிமேடில் வரத்து குறைவாக இருந்ததால், மீன் விலை விறுவிறுவென உயர்ந்தது. காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், புரட்டாசி மாதம் எதிரொலியால், கடந்த வாரங்களில் மீன்களின் விலை சற்று குறைவாக இருந்தது. இந்த நிலையில், காசிமேடு துறைமுகத்தில் இருந்து ஆழ் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள் பெரும்பாலானவை, நேற்று கரை திரும்பவில்லை. 20க்கும் குறைவான விசைப்படகுகளே கரை திரும்பின. அவற்றிலும் மீன்வரத்து குறைவாகவே இருந்தது. அதேநேரம், அதிகாலை முதலே மீன் வாங்க பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால், மீன் விலை அதிகரித்தது. அதிகாலை மீன் வாங்க வந்த பலரும் ஏமாற்றம் அடைந்தனர். மீன் விலை நிலவரம் வகை கிலோ (ரூ.) வஞ்சிரம் 1,100 - 1,300 வெள்ளை வவ்வால் 1,100 - 1,200 ஐ வவ்வால் 1,200 - 1,400 பாறை 500 - 600 கறுப்பு வவ்வால் 800 - 900 கடல் விரால் 500 - 550 சங்கரா 400 - 500 தும்பிலி 150 - 200 கானாங்கத்த 200 - 250 கடம்பா 300 - 400 நெத்திலி 300 - 350 வாளை 100 - 150 இறால் 400 - 500 டைகர் இறால் 1,200 - 1,300 நண்டு 300 - 550 வரி நண்டு 500 - 600


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி