உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரோந்து போலீசை தாக்கிய ஐந்து பேர் கைது

ரோந்து போலீசை தாக்கிய ஐந்து பேர் கைது

அயனாவரம், அயனாவரம், பாளையக்கார தெருவைச் சேர்ந்தவர் முத்துராசா, 32. அயனாவரம் உதவி கமிஷனரின் தனிப்பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் இரவு, அயனாவரம் பகுதியில் முத்துராசா ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மதுரை தெருவில் உள்ள அரசு பள்ளி அருகில், வாலிபர் ஒருவர் போதையில், இளம்பெண் ஒருவரிடம் சாலையில் தகராறு செய்து கொண்டிருந்தார். போலீஸ்காரர் முத்துராசா, இருவரையும் விலக்கி விட்டு, வீட்டிற்கு செல்லுமாறு கூறினார். ஆத்திரமடைந்த போதை வாலிபர், அவருடன் இருந்த நண்பர்கள் சேர்ந்து, முத்துராசாவை கற்களால் தாக்கி தப்பினர். காயமடைந்த முத்துராசாவை, அங்கிருந்தோர் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அயனாவரம் போலீசார் விசாரித்து, சம்பவத்தில் ஈடுபட்ட அயனாவரத்தைச் சேர்ந்த பிரகாஷ், 24 அவரது நண்பராகளான அதே பகுதியைச் சேர்ந்த சாலமன், 26, பிரசாந்த் 24, சதீஷ்குமார், 21, முருகேஷ் 24 ஆகியோரை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ