இந்திரா நகரில் ரூ.4.40 கோடியில் புட் கோர்ட்
அடையாறு:அடையாறு இந்திரா நகரில் உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில், புதிதாக 'புட் கோர்ட்' அமைக்க, 4.40 கோடி ரூபாயை மாநகராட்சி ஒதுக்கி உள்ளது. அடையாறு மண்டலம், 173வது வார்டு, இந்திரா நகர் 3வது அவென்யூவில், மாநகராட்சி வணிக வளாகம் உள்ளது. இதில், 15க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கட்டடத்தின் ஒரு பகுதி, மிகவும் சேதம் அடைந்துள்ளது. அதனால், இதை இடித்துவிட்டு, புதிதாக 'புட் கோர்ட்' அமைத்து வாடகைக்கு விட, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. கட்டடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டடம் கட்ட, 4.40 கோடி ரூபாயை மாநகராட்சி ஒதுக்கி உள்ளது. இதற்கான பணி, விரைவில் துவங்கும் என, அதிகாரிகள் கூறினர்.