உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விமான நிலையத்தில் உணவு திருவிழா

விமான நிலையத்தில் உணவு திருவிழா

சென்னை, சென்னை விமான நிலையத்தில், வாராந்திரஉணவுத் திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது.விமான நிலைய ஆணைய அதிகாரிகள், தனியார் உணவு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து, வாராந்திர உணவு திருவிழாவை, நேற்று முன்தினம், சென்னை விமான நிலையத்தில் துவக்கினர்.வாரந்தோறும் வியாழக்கிழமை மதியம் 3:00 மணிக்கு, சர்வதேச 'லவுஞ்ச்' பகுதியில் இந்த உணவு திருவிழா நடக்க உள்ளது. இதில், பிரபல சமையல் கலைஞர்கள் பங்கேற்கின்றனர். ஆரோக்யமான உணவு பழக்கம் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட உள்ளது.டிக்கெட் எடுத்து சர்வதேச விமானத்தில் செல்ல நினைப்பவர்கள் மட்டுமே, இந்த உணவு திருவிழாவில் பங்கேற்க முடியும்; வெளி ஆட்களுக்கு அனுமதி கிடையாது என, சென்னை ஏர்போர்ட் அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை