உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மதுபோதையில்  தகராறு பழைய குற்றவாளி கைது 

மதுபோதையில்  தகராறு பழைய குற்றவாளி கைது 

நொளம்பூர்,சென்னை மேற்கு முகப்பேரை சேர்ந்தவர் முத்தரசன், 33 ; தனியார் நிறுவன ஊழியர். இவர், கடந்த 8ம் தேதி இரவு, மேற்கு முகப்பேர், பஸ் டிப்போ பின்புறம், நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தார்.அப்போது, அருகே மது அருந்திக் கொண்டிருந்த மர்ம நபர்கள், முத்தரசனிடம் வீண் தகராறு செய்து, மது பாட்டிலால் தலையில் அடித்து தப்பினர். பலத்த காயமடைந்த முத்தரசன் தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று திரும்பினார்.இதுகுறித்து, நொளம்பூர் போலீசார் வழக்குபதிந்து, நொளம்பூரைச் சேர்ந்த பழைய குற்றவாளி ஜீவன், 19. என்பவரை கைது செய்து, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை