உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / டிராவல்ஸ் ஆபீசில் ரகளை முன்னாள் ஊழியர் கைது

டிராவல்ஸ் ஆபீசில் ரகளை முன்னாள் ஊழியர் கைது

ஜெ.ஜெ நகர், நெற்குன்றம், கோல்டன் ஜார்ஜ் நகரில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருபவர் குணசேகரன், 63. கடந்த 31ம் தேதி, குணசேகரன் அலுவலகத்தில் இருந்தபோது, அங்கு வந்த முன்னாள் ஊழியர் சுரேஷ், 37, என்பவர். குணசேகரனை தகாத வார்த்தைகளால் திட்டினார். அவரை வெளியே போகும்படி குணேசேகரன் சத்தம்போட்டதும், அவரை தாக்கியதோடு, கையில் வைத்திருந்த கற்களை வீசி, அலுவலகத்தில் இருந்த, 'டிவி' மற்றும் கண்ணாடிகளை நொறுக்கிவிட்டு தப்பினார்.ஜெ.ஜெ.நகர் போலீசார் வழக்கு பதிந்து, திருமங்கலம் சத்யா நகரைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை கைது செய்தனர்.விசாரணையில், சுரேஷ் மதுபோதையில் வேலைக்கு வந்ததால், குணசேகரன் வேலையை விட்டு நீக்கியதும், அந்த ஆத்திரத்தில் ரகளை செய்ததும் தெரிய வந்தது. கைதான சுரேஷ், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை