உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெண்ணிடம் சில்மிஷம் மாஜி அரசு ஊழியர் கைது

பெண்ணிடம் சில்மிஷம் மாஜி அரசு ஊழியர் கைது

வேளச்சேரி:கடலுார் மாவட்டத்தை சேர்ந்த 23 வயது பெண், நான்கு மாதங்களுக்கு முன் குடும்பத்துடன் சென்னையில் குடியேறினார். கணவர் ஆட்டோ ஓட்டுகிறார்.இவர், வேளச்சேரி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள பொன்னையா, 78, என்பவர் வீட்டில், இருதினங்களுக்கு முன், வீட்டு வேலைக்கு சேர்ந்தார்.பொன்னையா, அரசு காப்பகத்தில் காவலாளியாக இருந்து ஓய்வு பெற்றவர். மகன், மருமகள் வேலைக்கு சென்ற பின், பொன்னையா வீட்டில் தனியாக இருந்தார்.நேற்று முன்தினம், வீட்டு வேலை செய்து கொண்டிருந்த பெண்ணிடம், பொன்னையா சில்மிஷம் செய்துள்ளார்.உடனே வீட்டை விட்டு வெளியேறிய அப்பெண், கணவரிடம் தகவல் தெரிவித்து, வேளச்சேரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை செய்து, பொன்னையாவை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை