உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பல்நோக்கு கட்டடத்திற்கு அடிக்கல்

பல்நோக்கு கட்டடத்திற்கு அடிக்கல்

விருகம்பாக்கம், கோடம்பாக்கம் மண்டலம், 128வது வார்டு விருகம்பாக்கம் இளங்கோ நகரில் மாநகராட்சி இடம் உள்ளது. இங்கு போலீஸ் சிறுவர் - சிறுமியர் மன்றம் இயங்கி வந்தது. இந்த இடத்தில், தி.மு.க., - எம்.பி., தமிழச்சி தங்கபாண்டிய் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், 65 லட்சம் ரூபாய் மதிப்பில் பல்நோக்கு கட்டடம் கட்ட மாநகராட்சி முடிவு செய்தது. பல்நோக்கு கட்டடத்தின் முதல் தளத்தில், உடற்பயிற்சி கூடம் மற்றும் போலீஸ் சிறுவர் - சிறுமியர் மன்றத்திற்கு இடம் ஒதுக்குவதாக மாநகராட்சி தெரிவித்தது. இதற்கான, அடிக்கல் நாட்டும் விழா, நேற்று நடந்தது. இதில், எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன், கவுன்சிலர் ரத்னா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை