மேலும் செய்திகள்
சிறுவனை கடத்திய நால்வர் கைது
31-Oct-2025
சென்னை: நண்பர் தாக்கப்பட்டது குறித்து கிண்டல் செய்த வாலிபரை, கல்லால் அடித்துக் கொன்ற நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர். சென்னை, எண்ணுார், இந்திரா நகர், அய்யப்பன் கோவில் தெருவை சேர்ந்த சரத் என்ற சரத்குமார், 31, கூலி வேலை பார்த்தார். நேற்று முன்தினம் மதியம், ராமமூர்த்தி நகர் பிரதான சாலையில் நடந்து சென்றபோது, சிலர் திடீரென சரத் மீது கற்களை வீசி தாக்கிவிட்டு தப்பினர். இதில், படுகாயமடைந்த சரத்தை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து, எண்ணுார் போலீசார் அடிதடி வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். மேலும், சம்பவ இடத்தில் இருந்த, 'சிசிடிவி' கேமரா காட்சி பதிவுகளை வைத்து, தாக்குதலில் ஈடுபட்ட தாழங்குப்பம், சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த ஜான்சன், 18, லோகேஷ்வரன், 21, இந்திரா நகரைச் சேர்ந்த சஞ்சய், 18, திலகர் நகரைச் சேர்ந்த பிரதீப்குமார், 20, ஆகிய நால்வரையும் கைது செய்து விசாரித்தனர். போலீசார் கூறியதாவது: சரத்தின் தம்பியான சந்தோஷ், அவனது நண்பர்களோடு சேர்ந்து, கைதாகியுள்ள நால்வரின் நண்பரான ஜெயந்தன் என்பவரை, சில தினங்களுக்கு முன் கத்தியால், தலையில் வெட்டியுள்ளார். இந்நிலையில் நேற்று, ஜெயந்தனின் நண்பர்களான நால்வரும், ராமமூர்த்தி நகர் பிரதான சாலையில் உள்ள ஹோட்டலுக்கு சாப்பிட சென்ற போது, அங்கு நின்றிருந்த சந்தோஷின் அண்ணன் சரத், ஜெயந்தன் வெட்டப்பட்டது குறித்து கிண்டல் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்தவர்கள், கற்களை வீசி சரத்தை தாக்கிஉள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர். இதற்கிடையில், நேற்று அதிகாலை, சிகிச்சை பலனின்றி சரத் உயிரிழந்தார். எண்ணுார் போலீசார், வழக்கை கொலை வழக்காக மாற்றி, கைதான நால்வரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
31-Oct-2025