உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வழிப்பறி சிறப்பு எஸ்.ஐ.,க்கு நான்கு நாள் போலீஸ் காவல்

வழிப்பறி சிறப்பு எஸ்.ஐ.,க்கு நான்கு நாள் போலீஸ் காவல்

சென்னை, சென்னை, சைதாப்பேட்டை காவல் நிலையத்தில், சிறப்பு எஸ்.ஐ.,யாக பணிபுரிந்தவர் சன்னி லாய்ட், 48. அவர், திருப்பத்துார் மாவட்டத்தில் இருந்து, முகமது கவுஸ் என்பவர் எடுத்து வந்த, 20 லட்சம் ரூபாயை பறித்த வழக்கில், திருவல்லிக்கேணி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவரை, நான்கு நாள் போலீஸ் காவலில்எடுத்து விசாரிக்க, எழும்பூர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, இந்த வழக்கில், திருவல்லிக்கேணி சிறப்பு எஸ்.ஐ., ராஜா சிங் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் மூன்று பேர் கைதாகினர். இவர்களையும் போலீசார் காவலில் எடுத்து விசாரித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை